ஞாயிறு, 18 ஜூலை, 2010

உலக வரலாறு

ஒரு பிரித்தானிய கலைப்பிரிவு மாணவனின் பார்வையில் இதுவரையில் உலக வரலாறு எப்படி இருந்திருக்கிறது என்பதை பேனாவில் வரையப்பட்ட அசையுரு மூலம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பரிணாம கொள்கை தான் மிக முக்கிய வெளிப்பாடு.எனினும் இயேசுவையும் மறக்கவில்லை. இந்த காணொளியில் சில வரலாற்று தவறுகள் இருந்தாலும் அவருடைய முயற்சியை வரவேற்போம்.



சனி, 17 ஜூலை, 2010

நிழலிலே கைவண்ணம் கண்டான்

கல்லிலே கைவண்ணம் கண்டான் சோழன். குமி யமஷிடா என்னும் யப்பானிய கலைஞி நிழலிலே கைவண்ணம் கண்டாள். இவருடைய கற்பனைத்திறன் பிரமிக்க வைக்கும் அந்நேரம் , இவரின் வடிவமைப்புகள் ,ஒளி ஊட்டல் இன்றி பார்க்கும் போது எந்தவகையான பிரமிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. குறிப்பிட்ட கோணத்தில் ஒளி பாயச்சப்படும்போது அழகிய நிழல்களை உருவாக்குகிறது.

1 . பெண்ணின் உருவம்




2 . க்ளைடரில் பறக்கும் பெண்




3 . காதலர்கள்


4 . சிறுவன்



ஒற்றை நூலும் சிறு ஆணிகளும் கொண்டு உருவாக்கப்பட்டது.

5. பேசும் அசையுரு




6 . நியூ யோர்க்கில் இடம்பெற்ற கண்காட்சியில் ,





குமி யமஷிடா அவர்கள் ஒரு யப்பானிய தொலைக்காட்சியில் .


வெள்ளி, 16 ஜூலை, 2010

பயமுறுத்தும் பூ

பெண்களை பூவிற்கு ஒப்பிடுவார்கள், குழந்தைகளை பூவிற்கு ஒப்பிடுவார்கள் , ஆனால் இந்த பூவை எதற்கு ஒப்பிடுவது . ஒரு குசும்பன் இப்பூவை dart vader(star wars) இக்கு ஒப்பிடுகிறான்.

பிடித்த பெண்ணுக்கு ரோசாவையும் , எம்மை வெறுக்கும் பெண்ணுக்கு இப்பூவையும் அனுப்பலாம். திறந்து பார்க்கும் பெண் நிச்சயம் ஒருகணம் திகைத்து விடுவாள்.தூர இருந்து ரசிக்கலாம்.

சிறு குழந்தைகளை நிச்சயம் திகிலூட்டலாம்.






இந்த பூவின் பெயர் Alonsoa unilabiata.இப்பூ தென்னாபிரிக்காவில் காணப்படுகிறது.


இந்த பூவில் எந்த வண்டுகள் கூடும் , எப்படி மாநாடு போடும்?!!!